புதன், 5 பிப்ரவரி, 2020

நிலவு அவள்

தேடித்தேடி ஓய்ந்த பின்னும்

தேடுகிறேன் எங்கேனும் ஓர்

மூலையில் என் மூதாதையர்கள்

விட்டு சென்ற

பெண்மையின் இலக்கணத்தை...!

தேடலின் இறுதியில்

கிடைத்தவள் நீ தான்

நான் உன்னை பார்த்தபொழுது

நீ கொண்ட வெட்கம்

எனை துண்டாடியது

என் பல வருட தேடல்கள்

உன்னால் முடிவுற்றது
                                              - பச்சை பட்டாடை

வெட்கம்

நான் உன்னை

பார்க்க வந்த வேளையில்,

நீ உன் முகம் காட்ட மறுத்தாய்

உந்தன் பயம் கலந்த வெட்கம்

எனை உன் மீதான காதலை

ஆயிரம் ஆயிரம் பலத்துடன்

ஒன்றாக்கி எனை துண்டாடுதடி...!!

வெள்ளி, 22 அக்டோபர், 2010

நினைவுகள்

எனக்கென்னவோ தோன்ற
அதை உன்னிடம் சொல்ல
வாய் கொள்ள முடியாத
சிரிப்பில் நீ...
உன் சிரிப்பின் அழகில்
மயங்கிய
நான்...
நாட்களின்
ஓட்டத்தில் நினைவுகள்
மட்டுமே துணையாக
இதயத்தில்
சிறு வலியுடன்
தேடி வருகிறேன்
எதையேனும்
தேடியது கிடைத்தால்
குதித்து கும்மாளமிடும்
குழந்தையென்று
ஆகி விட்டேன்
உன்னை கண்ட
அந்த நிமிடத்தில்...
-பள்ளி தோழி

வெட்கம்

வெட்கம்

அவளின்
தாய் வீட்டு சீதனமாம்
அவளின் முகம்
கானுமுன்னம்
நான் கண்டது
அவளின்
நாணம்
எப்படியேனும்
கண்டுவிட
துடிக்கும்
மனதுக்கு
ஆறுதல் சொல்கிறேன்
கேட்பேனா என்று
சூளுரைக்கிறது
தவிக்கும்
மனதை
கட்டுபடுத்தி
மாலையில்
திருவிழாவில்
காணலாமென்று
ஆற்றுபடுத்திவிட்டு
காத்திருக்கும்
வேளையில்
மாலையும்
என்னை திக்கி திணறி
வந்து சேர்ந்தது
கோவிலில்
தேரை இளுத்தவர்களை
கேட்க தோன்றியது
அம்மன் நடந்து வர
சிலையை மட்டும்
சுமந்து
வருவது நியாயமா
என்று...

தமிழ் சமுதாயம்

தேடி தேடி
ஓய்ந்த பின்னும்
தேடுகிறேன்
எங்கேனும்
ஓர் மூலையில்
என் மூதாதையர்கள்
விட்டு சென்ற
பெண்மையின்
இலக்கணத்தை...!
தேடலின்
இறுதியில்
கிடைத்தவள்
நீ தான்
நான் உன்னை பார்த்தபொழுது
நீ கொண்ட வெட்கம்
எனை துண்டாடியது
என் பல வருட
தேடல்கள்
உன்னால்
முடிவுற்றது
- பச்சை பட்டாடை

வழியனுப்ப வந்துவிடு...

பெற்றவளையும் வெறுக்க முடிந்தது

காதலின் கடிவாளம் கண்ணை

மறைத்து காற்றை கால்களில்

கட்டிக்கொண்டு பறந்தது மனது...

அவளை மணமுடிக்க

பேசச்சொல்லி விரட்டியது..

மடமனதுக்கு தெரியவில்லை

மாறிடுவாள் மங்கையென்று

அவளின் மாறுதலால், ஆறுதலின்றி

தவிக்கிறேன் தோல்விகளின்

உச்சத்தில் சாவை எதிர்கொள்ள,

துணிவில்லை தினம் சாகிறேன்

ஆற்றுவாரின்றி எல்லோரும் தூற்ற...!!

வழியனுப்பவாவது வரசொல்லுங்கள்

அந்த மகராசியை...!!!

காத்திருக்கிறேன்...

நீ வருவாய் என்று நான்

பார்த்திருந்த நம் வீட்டு

விழாக்கள் எத்தனை...

வரவில்லை என்று தெரிந்தும்,

காத்திருந்த கணங்கள் எத்தனை...

ஏன் வரவில்லை என்று,

நான் கேட்கும்போது

நீ தரும் ஒரே பதில் "புன்னகை"

அதை பார்த்த பின்பு

எங்கே சென்றது என்

கோபக்கனல் என்று தேடிய

நாட்கள் எத்தனை... எத்தனை...

சீக்கிரம் வந்து விடு

நான் கண்களில் கனவுகளை

சுமந்து கொண்டு காத்திருக்கிறேன்

கணவனாகும் போது

புகுந்த வீட்டு "சீதனமாக" பரிசளிக்க..!!